• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளி மாணவன் தேனி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை

ByJeisriRam

May 12, 2024

தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தை சேர்ந்த கந்தவேல் அரசு மேல் நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர், செல்லக்கழனி, தம்பதியரின் இரண்டாவது மகன் கபில் (15). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தேனி மாவட்ட அளவில் முதலிடம், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று பெற்று சாதனை படைத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பிலும் சாதனை படைத்து மருத்துவராகி சேவை செய்ய உள்ளதாக மாணவர் கபில் தெரிவித்துள்ளார்.