• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Byவிஷா

May 11, 2024

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதன்படி அடுத்த 5 நாட்களுக்கு நீலகிரி, கோவை , தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.