• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55சதவிகிதம் பேர் தேர்ச்சி

Byவிஷா

May 10, 2024

இன்று வெளியான 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு முடிவில், மொத்தம் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகமாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58சதவிகிதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53சதவிகிதம் என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95சதவிகிதம் அதிகமாக உள்ளது.
பாடவாரியாக தமிழில் 8, ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4.,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31சதவிகிதம் உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.