• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு பல்வேறு சோதனைகளுக்குப் பின்பு மாணவ, மாணவிகள் தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதி!

ByG.Suresh

May 6, 2024

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் 02 மணி முதல் மாலை 05:20 மணி வரையில் நடைபெறுகின்றது தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, லாடனேந்தல் இந்த மூன்று இடங்களில் ஐந்து தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1942 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளிடம் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மைய வாயிலில் ஏராளமான காவலர்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌ தேர்வு மையத்திற்கு வெளியே ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நீட் தேர்வினை எழுதி விட்டு வருவதை காண ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்‌.