• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விவேகானந்த கல்லூரி, மாணவர் பண்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி

ByN.Ravi

May 3, 2024

மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 01.05.2024 முதல் 10.05.2024 வரை பள்ளி மாணவர்களுக்கான 26ஆவது பண்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், ராணிப்பேட்டை. சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 53 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். மாணவர் பண்பாட்டுப் பயிற்சி முகாம் துவக்க விழாவில் விவேகானந்த கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் செயலர் சுவாமி பரமானந்த, விவேகானந்த கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர். முகாமில், மாணவர்களுக்கு யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, இசைப்பயிற்சி, பக்திப் பாடல் பயிற்சி, வேத கணிதப் பயிற்சி, வேத மந்திரப் பயிற்சி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சி, கணினிப் பயிற்சி, தேசத் தலைவர்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் பண்பாட்டுக் கலாச்சாரப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தொடக்க நிகழ்ச்சியில், சமஸ்கிருத துறைத்தலைவர் இறை வணக்கமும், வேதியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கணபதி வரவேற்புரையும், விவேகானந்த கல்லூரி முதல்வர் தலைமையுரையும், குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரையும், விவேகானந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன் வாழ்த்துரையும், பொருளியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அருள்மாறன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தும், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் மீனாட்சிசுந்தரம் நன்றி உரையும் வழங்கினர்.