துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக, வந்த தகவலை எடுத்து சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகமது அபுபக்கர் (வயது 33) என்பவர் சந்தேகத்துரிய வகையில் நடந்து கொண்டதையடுத்து, அவரின் உடமையை சோதனை செய்தது. அவரிடமிருந்து 812 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூபாய் 48 லட்சத்து 78 ஆயிரம் ஆகும்..