• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஓய்வெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Byதரணி

Apr 28, 2024

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், தேர்தல் முடிந்துள்ள நிலையில் கொடைக்கானல் செல்ல உள்ளார்.

நாளை 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்கள் அங்குள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் வருகையை ஒட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன. முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மாலத்தீவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார் ஸ்டாலின். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக தெரிகிறது.