• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இன்றுடன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

Byவிஷா

Apr 24, 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.