• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் மருது பாண்டியர்களின் 225 வது குருபூஜை திமுக சார்பில் சார்பில் மரியாதை..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2026

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 225 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது பாண்டியர்களின் திரு உருவப் படத்திற்கு திமுக சார்பில் சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் தீர்த்தம் என்ற ராமன் பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன் கார்த்தி மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர் விவசாய அணி வக்கீல் முருகன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி பேரூர் துணைச் செயலாளர்கள்

கொத்தாலம் செந்தில்வேல் ஸ்டாலின் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் முத்து செல்வி சதீஷ் சிவா குருசாமி செல்வராணி ஊத்துக்குளி ராஜா முள்ளிப்பள்ளம் கேபிள் ராஜா வழக்கறிஞர் கோகுல்ராஜ் சங்கங்கோட்டை சந்திரன் வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் எஸ் ஆர் சரவணன் ஒன்றிய பிரதிநிதி ராமநாதன் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை சங்ககோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.