• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்

BySeenu

Apr 24, 2024
கோவை-அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை சக்தி கரகம்,அக்னி சட்டி புறப்பாடு ஊர்வலம் கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக டவுன் ஹால்,ஒப்பனைக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி,பால் மார்கெட், புரூக் பாண்டு ரோடு,நஞ்சப்பா ரோடு வழியாக அவிநாசி சாலை மேம்பாலத்தை ஒட்டி அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும்,சக்தி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக தண்டு மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர்.

தண்டு மாரியம்மன் கோவில் ஊர்வலத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை டவுன்ஹால், அவிநாசி சாலை ஆகிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.