• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி முன்பு வீணாகும் குடிநீர்

ByN.Ravi

Apr 16, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி கழிவுநீருடன் கலப்பதால், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வைகை ஆற்றில் இருந்து முள்ளிப்பள்ளம் மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்
படுகிறது. இந்த குழாயானது, முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறிய அருகில் 200 மீட்டர் தொலைவில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு தேங்குவதால், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து கேட்டால், தென்கரை ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் என்றும், தென்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், முள்ளிப்பள்ளம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வரும் குடிநீர் என்றும், மாறி, மாறி பதில் சொல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் என,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.