• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராமேஸ்வரத்தை தலைசிறந்த நகரமாக மாற்றுவேன் – ஓபிஎஸ் உருக்கமான பேச்சு!

ByTBR .

Apr 12, 2024

காசியை எப்படி இந்திய பிரதமர் மோடி அவர்கள் எப்படி தலைசிறந்த நகரமாக மாற்றினாரோ… அதேபோன்று ராமேஸ்வரத்தை தலைசிறந்த நகரமாக மாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன் என்ற ஓபிஎஸ்-ன் பேச்சு வாக்காளர்களை கவர்ந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டிப்பத்திரம் பகுதியில் பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம்.. , “ராமேஸ்வரம் ஒரு புண்ணிய பூமி. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி எப்படி காசியை உலக தரமிக்க நகரமாக மாற்றி உள்ளாரோ, அதேபோன்று ராமேஸ்வரத்தை பழங்கால புண்ணிய பூமிக்கு நிகராக மாற்றிக் காட்டுவேன் என உறுதியளிக்கிறேன்” என கூறினார்.