• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் : தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

Byவிஷா

Apr 10, 2024

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில், அவர்களுக்கு சக்கரநாற்காலி, சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
அணுகத்தக்க தேர்தலுக்கான வழிகாட்டும் குழுவின் 4-வது கூட்டம் அதன் தலைவரும், தமிழகதலைமை தேர்தல் அதிகாரியுமான சத்யபிரத சா{ஹ தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிவாக்காளர்கள் பெயர் சேர்ப்பதில்உள்ள பிரச்சினைகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சிறப்பு தேவைகளை மேற்கொள்ளும் வாக்குச்சாவடி அலுலவலர்களுக்கான பயிற்சி, வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகளான சாய்தளம், சக்கர நாற்காலிகள், குடிநீர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வாக்குச்சாவடி வசதிகள், மருத்துவபொருட்கள், தேவையான தளவாடங்கள், தேவையான வெளிச்சம் கிடைக்கும் வகையிலான மின்சாரஏற்பாடுகள், வாக்காளர் உதவி மையம், தண்ணீர் வசதியுடன்கூடிய கழிப்பறை, வாக்குச்சாவடி தன்னார்வலர்கள், வரிசையை மேலாண்மை செய்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், இணை தலைமை தேர்தல் அதிகாரி எச்.எஸ்.காந்த், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பொதுப்பணித் துறை, தொண்டு அமைப்புகள், மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.