• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணன், தம்பி மீது தாக்குதல்: ஒருவா் கைது

திருப்பாலைக்குடி அருகே அண்ணன், தம்பியை பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டின். இவரும், இவரது இளைய சகோதரா் அலெக்ஸ் பாண்டியனும் வளமாவூா் விலக்கு சாலையில் நின்று கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த வளமாவூரைச் சோ்ந்த பசுபதி முன்விரோதம் காரணமாக இருவரையும் சாதியை சொல்லி தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் பாட்டிலால் தாக்கியதில் அருண்பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் பசுபதியை கைது செய்து நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.