• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபாஷ்: கார்த்திக் சிதம்பரத்திற்கு சரியான போட்டியாளர் சேவியர் தாஸ் தான்!

ByG.Suresh

Apr 4, 2024

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்

ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். களம் இறங்கும் நபர்கள் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ள ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசத்தை காண்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி உட்பட நான்கு முனை போட்டி நிலவி வரும் சூழலில் அதிமுக கூட்டணியின் சார்பாக சேவியர் தாஸ், திமுக கூட்டணி சார்பாக கார்த்திக் சிதம்பரம், பாஜக கூட்டணி சார்பாக தேவநாதவ் யாதவ், நாம் தமிழர் கட்சி சார்பாக எழிலரசி ஆகியோர் சிவகங்கை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை முன்பாக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் உத்தரவின் படி, வேட்பாளர் சேவை தாஸ் அறிவுரையின்படி, அதிமுக தேர்தல் பரப்புரையான ஒரு விரலால் ஓங்கி அடிப்போம் என்ற வீடியோ காட்சிகள் மறுபடியும் மறுபடியும் ஒலிக்க செய்தவாறு காணொளி பிரச்சாரங்கள் நடைபெற்றது.

கூடுதலாக அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகள் செய்த சாதனைகளான அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா படிப்பகம், அம்மா குடிநீர், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்வு காண்டது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை விளக்கி கூறும் வகையில் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒளித்திரையின் மூலம் வாக்காளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

இதனை இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

இதில் சிலர் அதிமுக எது செஞ்சாலும் வித்தியாசம் தான்…

கார்த்திக் சிதம்பரத்துக்கு சரியான போட்டியாளர் சேவியர் தாஸ் தான் … என்று முனுமுனுத்துக் கொண்டே பேசியதை நம் காதுகளால் கேட்க முடிந்தது.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2024-04-04-at-8.31.59-PM-2.jpeg

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்