• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாய நிலங்கள், வனப் பகுதியை அருகே மணல், மணி, கல்குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ByI.Sekar

Apr 3, 2024

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதி ஓட்டி விவசாய நிலங்களில் மண்,மணல், கல்குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேப்பம்பட்டி, நலகுண்டு பாறை பகுதியில் ஏராளமானவர்கள் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் , வாழை, தென்னை, முருங்கை, வெங்காயம் உள்ளிட்ட விவசாமிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

நல்ல குண்டு பாறையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மண் மற்றும் மணல் கல்குவாரிகள் செயல்பட கூடாது என தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சுப்புராஜ் மகன் சுரேஷ் கண்ணன், ரவி மகன் ராகுல் இருவரும் சேர்ந்து சர்வே 101/7 நிலத்தில் மண், மணல், கல்குவாரி, அமைக்க பத்தாண்டுகளுக்கு அனுமதி கோரி உள்ளனர்.

குறிப்பாக இந்த பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

எனவே இந்த பகுதியில் ஊராட்சி மன்ற தலைவி மணல், மண், கல்குவாரி அமைக்க தனியார் விவசாய நிலங்களில் பாதை அமைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே இந்த விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் கல்குவாரி, மண், மணல் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.