• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

செந்திலாண்டவர் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டம்!

Byகாயத்ரி

Nov 6, 2021

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழுநேர அன்னதான விரிவாக்க திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.


தமிழகம் முழுவதும் சில குறிப்பிட்ட கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலிலும் முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தினசரி சுமார் 2,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.பக்தர்களின் வசதிக்காக இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கோயில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோயில் கந்தசஷ்டி மண்டபம், அன்னதான மண்டபமாக மாற்றம் செய்யப்பட்டது.