
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாந்தோமில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன் காரணமாகவே வார இறுதி நாட்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதைத் தொடங்கியுள்ளோம்.
இதனிடையே, வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால் அடுத்து வந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவும், மழையினாலும் சனிக்கிழமையான இன்று நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
