• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு : இ.பி.எஸ் அறிவிப்பு

Byவிஷா

Mar 20, 2024

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.