• Tue. May 7th, 2024

பல மாநிலங்களுக்கான வாட் வரியை குறைத்தது ஒன்றிய அரசு

Byமதி

Nov 5, 2021

இந்தியாவில் தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்ததால், விலை குறைந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

பெட்ரோல் மீதான கலால் வரியை ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரி பத்து ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, சென்னையில் நேற்று, 106 ரூபாய் 66காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், ஐந்து ரூபாய் 26காசு குறைந்து 101 ரூபாய் 40காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாய் 59காசுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 11ரூபாய் 16காசு குறைந்து 91 ரூபாய் 43காசுக்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை புதுச்சேரி அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாய் மற்றும் வாட் வரி ஏழு ரூபாய் குறைத்ததால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 ரூபாய் 85காசு குறைந்து, 94ரூபாய் 94காசுக்கு விற்பனையாகிறது. இதே போல, டீசல் விலை லிட்டருக்கு 19 ரூபாய் குறைந்து, 83 ரூபாய் 58 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியைத் தொடர்ந்து பீகார், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிஷா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, திரிபுரா ஆகிய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *