• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Byவிஷா

Mar 4, 2024

கோடைக்காலம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே, சென்னை வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து, அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை மக்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரியின் நீர்மட்டத்தை பூர்த்தி செய்ய சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது. அதேபோல் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் வறண்ட வீராணம் ஏரி நிரம்பியதாலும், கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் பாசனத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதேபோல் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக குறைந்தது. இதனால் சென்னைக்கு தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.