• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசு கள்ளர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

ByP.Thangapandi

Feb 23, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது வகுரனி கிராமம். இக்கிராமத்தில் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் சுமார் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர் தமிழ்ஒளி தமிழரசன் ஹைதராபாத்தில் உள்ள வீரலிங்கம் குடும்பத்தாரின் உதவியோடு 25000 ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை இந்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர். இதற்காக உதவி செய்த வீரலிங்கம் குடும்பத்தாருக்கும், ஏற்பாடு செய்த தமிழ்ஒளி தமிழரசன் – க்கும் பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.