• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்

Byவிஷா

Feb 19, 2024

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியளவில், 2024 25ஆம் ஆண்டிற்க்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக தாக்கல் செய்கிறார்.
கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆளுநர் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டசபையில் 2024 -25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.
இதைத் தொடர்ந்து 20-ம் தேதி (நாளை) வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. நேற்று பட்ஜெட் இலச்சினை வெளியிடப்பட்டது. அதில் “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் இடம்பெற்றது.
பட்ஜெட்டுக்கான இலச்சினை வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும். அதே நேரத்தில் இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்களும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரிவாக்கம் உள்ளிட்டவற்றிக்கு கூடுதல் பட்ஜெட் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.