• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தனித்தேர்வர்களுக்கு பிப்.19ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு

Byவிஷா

Feb 16, 2024

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றது.
மேலும் பிளஸ் ஒன் (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.