• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி மருத்துவமனையில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் நேரில் ஆய்வு

ByP.Thangapandi

Feb 11, 2024

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேடபட்டி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மொக்கத்தான்பாறை என்ற கிராமத்தில் உள்ள பத்து குழந்தைகள் எலி காய்ச்சல் காரணமாகசிகிச்சை பெற்றுவரும் நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைதலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பிவி கதிரவன் பிகாம் எல்எல்பி எக்ஸ் எம்எல்எ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதில் மருத்துவர் தேன்மொழி மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் ஐ ராஜா மாவட்ட கவுன்சிலர் காசிமாயன் மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் மாணவரணி வினோத் மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாண்டியன் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.