• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வருகிறது ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்

Byவிஷா

Feb 2, 2024

விரைவில் ரேஷன் கடைகளில் மின்னணு எடை இயந்திரங்கள் மூலமாக பொருள்கள் வினியோகம் செய்யப்படுதவற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக வெளிப்படைத்தன்மை ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் விநியோக நேரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய மாற்றம் ஒன்று வந்துள்ளது. அதாவது விற்பனையாளர்களின் கடைகளில் மின்னணு எடை இயந்திரங்கள் மூலமாக ரேஷன் வினியோகம் செய்யப்படும். அதன்படி இயந்திரத்தில் இருந்து ரேஷன் அளவு கிடைத்தால் மட்டுமே சீட்டு கிடைக்கும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் இதன் மூலமாக வெளிப்படைத் தன்மை ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய மென்பொருள் கொண்ட இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலமாக கார்டில் பதிவு செய்யப்பட்ட யூனிட் அளவின் படி மட்டுமே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். இதன் மூலமாக பொருட்கள் குறைவாக விற்பனை செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு தீர்வு கிடைக்கும்.