• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் நூறு டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

Byவிஷா

Feb 1, 2024

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் 100 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. சமீபகாலமாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐ.ஜி.க்கள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் பாராளுமன்ற தேர்தலை நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.