• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

பிப்.10க்குள் அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த உத்தரவு

Byவிஷா

Feb 2, 2024

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்புத் திறனை, ஆண்டு இறுதியில் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த ஆண்டுவிழா நல்வாய்ப்பாக அமைகிறது. வருகிற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள், அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆண்டுவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுவிழா நடத்துவதற்கு ஏதுவாக ரூ. 14.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு ரூ.2,500, அதிகபட்சமாக 2,000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ.50,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.