• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளிக்கு தனியார் நிறுவனம் கழிப்பறை வசதி

ByKalamegam Viswanathan

Jan 29, 2024

சோழவந்தான் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வரும் பிரிட்டானியா நியூட்ரிசன் பவுண்டேஷன் தனியார் நிறுவனம் பள்ளியின் கழிப்பறை வசதிகளை மறு சீரமைப்பு செய்து கொடுத்தனர் நிறுவனத் திட்ட அலுவலர் ரஞ்சிதா மற்றும் களப்பணியாளர்கள் ஆனந்த் ராஜா பானுப்பிரியா தேவிப்பிரியா வாஞ்சிநாதன் ஜாகின் ஆகியோர் புதுபித்த கழிப்பறையை ஒப்படைத்தனர் தலைமை ஆசிரியை ராஜாத்தி மற்றும் ஆசிரியைகள் பணியாளர்கள் பெற்றோர்கள் இந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டினர் இந்த பள்ளி பின்தங்கிய பள்ளியாக உள்ளதால் இங்கு படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு மேலும் காம்பௌண்ட் சுவர், சுகாதார குடிநீர் மற்றும் கூடுதல் பள்ளி வகுப்பறைவசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.