

சோழவந்தான் கருப்பண்ணசாமி கோவிலில் 75 ஆம் ஆண்டு வெள்ளாவி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சலவைத் தொழிலாளர்கள் சார்பில், கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், 14 வது வார்டு பேரூர் திமுக கவுன்சிலர் நிஷா கௌதம ராஜா, சலவை தொழிலாளர் சங்க தலைவர் நாகராஜா, செயலாளர் செந்தில், பொருளாளர் முருகன், இளையநிலா, இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முருகேசன், செயலாளர் சிபிராஜ், பொருளாளர் விஜயகுமார் மற்றும் சோழவந்தான் சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

