
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஒன்பதாவது ஆண்டு விழாவில், எல்கேஜி, யுகேஜி பயிலும் பிஞ்சு குழந்தைகள் வண்ண, வண்ண கலரில் ஆடை அணிந்து கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி பார்வையாளர்களை கவரும் வகையில் அசத்தினர்.
விழாவில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில் பரதம் மற்றும் ஆங்கில பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி அசத்தினர்.இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி வெங்கட்ராமன், பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் பயிலும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



