• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் தேர் திருவிழாவில் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் தை பெருந்திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு தை பெருந் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது    
இந்நிலையில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா இன்று  சிறப்பாக நடைபெற்றது, இந்த திருவிழாவில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் குமரி மக்களவை உறுப்பினர் பொன். இராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் இழுத்தனர்.