அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 255-தொகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்பாளர்கள் யார், யார் என்ற ஆய்வை ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கும் சம்பந்தப்பட்ட ஆய்வு கூட்டம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ராகுல்காந்தியும், பொதுச்செயலாளர்.கே.சி.வேணுகோபல் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் சந்தியா ராயப்பன் தலைமையில், வட்டார தலைவர் வழக்கறிஞர் சாம் சுரேஸ்குமார் முன்னிலையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் கே.டி.உதயம் பங்கேற்று, குமரி மாவட்டம் எப்போதும் காங்கிரஸ் சார்ந்த மாவட்டமாக சுதந்திர பெற்ற நாள் முதல் இன்று வரை தொடர்கிறது.

குமரி மாவட்டத்தில் 1969 நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும் தலைவர் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து, 1971ல் நடைபெற்ற தேர்தலிலும் தலைவர் காமராஜர் வெற்றி பெற்று, குமரி மாவட்டம் ஒரு காங்கிரஸ் கோட்டை என்பதை பறைசாற்றினோம். இந்தியாவின் ஜனநாயகம். மதவாத மற்ற பண்புகள் தொடராது தடுக்க முனையும் பாஜகவை 2024_பொது தேர்தலில் இந்திய கூட்டணியின் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சூழலில் இந்தியாவின் தென் கோடி நாடாளுமன்ற கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யும் நிலைக்கு நம்முடைய கட்சி பணிகளை இன்றிலிருந்து தொடர்வோம் என காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தெரிவித்தார்.




