• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

ByP.Thangapandi

Dec 28, 2023

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு காலையில் தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உசிலம்பட்டி நகர, ஒன்றியம் மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி, எழுமலை பேருர் கழக நிர்வாகிகள் கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆறு பேர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக, மொட்டை எடுத்து துக்கத்தை அனுசரித்து வருகின்றனர். மேலும் பலர் மொட்டை போட்டு வருகின்றனர்.