இளைஞர் ஸ்டீபன் அவரது நண்பர்கள் 26_ஆண்டுகளுக்கு சிறியதாக தொடங்கிய”அருமனை கிறிஸ்துமஸ் விழா”….. இன்று ஆலமரம் போல் உயர்ந்து வளர்ந்து, குமரியே கொண்டாடும் விழாவாக ஒரு பொது விழாவாக மாறியுள்ளது.
இந்த ஆண்டுக்கான 26_வது ஆண்டு விழா நேற்று (டிசம்பர்_22)ம் நாள் மாலை, அருமனை ஸ்டீபன் தலைமையிலான இசைக்குழுவினர் சேர் இசைப்பாடலாக, இயேசுவே எந்தன்
ஆருயிரே_ என்ற பாடலுடன் தொடங்கியது.
இவ்வாண்டு விழாவில் வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு திருமண உதவிகள் வழங்க உள்ளது.




