• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

நெல்லை – சென்னை வந்தேபாரத் ரயில் இன்று ரத்து..!

Byவிஷா

Dec 20, 2023

தென்மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை காரணமாக தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை – சென்னை மற்றும் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும். நெல்லை மற்றும் தாதர் விரைவு ரயில் மதுரையிலிருந்து புறப்படும். மதுரை மற்றும் புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இடத்திற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனைப் போலவே திருச்சி மற்றும் ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.