• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி மூன்று எருமை மாடுகள் பலி..,

ByKalamegam Viswanathan

Dec 19, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகர் பகுதியில் தனிக்கொடி என்பவர் வசித்து, இவர் 10 எருமை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். தனிக்கொடி மாடுகளை அருகே உள்ள தோப்பிற்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம். அதே போல் இன்று காமராஜர் நகர் பகுதியில் இருந்து இந்திரா நகர் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றுக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை அழைத்துச் சென்ற போது, அங்கு மின்கம்பத்தை தாங்கும் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மேய்ச்சலுக்கு சென்ற மூன்று எருமை மாடுகள் மின்சாரம் தாக்கி பலியானது. 3 எருமை மாடுகளின் மதிப்பு 2 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் தனிக்கொடி வேதனை அடைந்துள்ளார்.

தமிழகஅரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்..