• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்…

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் தேவரின் 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரியமாடு பந்தயத்தில் 27 மாடுகளும், நடுமாடு பந்தயத்தில் 26 மாடுகளும், பூஞ்சிட்டு பந்தயத்தில் 66 மாடுகளும் பங்கேற்றன.

இதில் மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாட்டுவண்டி வீரர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

இப்போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.