காக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமி – சேலத்தில் பரபரப்பு
சேலம் ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
ராமர் பாதம் வந்த வாகனம் சேலத்திலிருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் வழியில் தமிழகத்தின் முன்னால் முதல்வர் கட்சி அலுவலகத்தில் இருக்கிறார் என கேள்விப்பட்டு ராமர் பாதம் வைத்துள்ள வாகனத்தை அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். யார் அனுமதியும் வாங்காமல் வந்தது காரணமாக அதிமுக கட்சியினர் தலைவர் வாகனம் மட்டும் தான் உள்ளே நிற்க வேண்டும் உங்கள் வாகனம் எல்லாம் வெளியே செல்ல வேண்டுமென வாகனத்தை வெளியே அனுப்பி விட்டனர். பிறகு எடப்பாடியாருக்கு தகவல் சென்றது. அவர் வெளியே காத்திருக்கச் சொல்லுங்கள் கூட்டம் முடிந்தவுடன் நான் வந்து பார்க்கிறேன் என தகவல் சொல்லி அனுப்பி உள்ளார்.
பிறகு ராமர் பாதம் வந்த வாகனம் வெளியே காத்திருக்க, கூட்டம் முடிந்து கிளம்பும் போது, ராமர் பாதத்தை மேல் வைத்து வணங்கிவிட்டு சென்றார்.
பிறகு அந்த ராமர் பாதத்தை அவருடைய கட்சி அலுவலகத்துக்குள் வைத்து ராமர் பாதம் பெட்டியை வைத்து கற்பூரம் காட்டி வணங்கி மீண்டும் பொதுச்செயலாளராக எங்கள் அண்ணன் தான் வரவேண்டும் முதலமைச்சராகவும் அண்ணன்தான் வரவேண்டுமென வணங்கி பிறகு அவர்களை அனுப்பி வைத்தார்கள்.