• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் – விவசாயிகள் வேதனை…

குஞ்சங்குளம் அருகே மோட்டார் இல்லதவர் விளைநிலத்தில் தேங்கும் தண்ணீரை பாத்திரத்தால் இறைக்கும் விவசாயிகளின் நிலை.

திருவாடானை ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் அளவிற்கு 27 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு விளை நிலங்கள் உள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் விதைக்க முடியாமல் அவதிப்படும் அளவில் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

சில இடங்களில் தண்ணீர் தானாக வெளியேறினாலும் பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட வேண்டிய இருந்த நிலையில் பணம் படைத்தவர்கள் மோட்டார் வைத்து இறைத்து விடுகின்றனர். வசதி இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரத்தை வைத்து இறைக்கின்றனர்.

குஞ்சம்குளம் பகுதியில் ஒரு பெண்மணி தனது விளைநிலத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை பாத்திரத்தால் இறைத்து வெளியேற்றி விவசாயம் பார்க்கும் நிலை பார்ப்பதற்கு சற்று சங்கடமாக இருந்தால் விவசாயின் நிலை இதுதான் என்பது கவலை.