• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மிக்ஜாம் புயல் பாதிப்பால் காய்கறிகளின் விலை உயர்வு..!

Byவிஷா

Dec 7, 2023

மிக்ஜாம் புயல் பாதிப்பால் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை எதிரொலியாக, சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூபாய் 10 வரை உயர்ந்துள்ளது. மழை பாதிப்பால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்தது காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 55, தக்காளி ரூபாய் 32, கத்தரிக்காய் ரூபாய் 40, இஞ்சி ரூபாய் 90, அவரை ரூபாய் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் வரத்து சீராகி ஓரிரு நாளில் காய்கறிகளின் விலை குறையும் என்று கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.