• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது…

Byதரணி

Dec 2, 2023

வங்க கடலில் நிலை கொண்டுள்ள இது, நாளை புயலாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.

டிசம்பர் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்-வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.