• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முறையான அறிவிப்பு இல்லாததால் அலைக்களிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்…

ByKalamegam Viswanathan

Dec 2, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அட்டை வாடிப்பட்டியில் வழங்குவதாக அதிகாரிகள் கொடுத்த அறிவிப்பை கண்டு தங்களது ஊர்களில் இருந்து ஆட்டோகளிலும், வாடகை வண்டிகளிலும் வாடிப்பட்டிக்கு வந்த நிலையில் தவறான தகவல் கொடுத்து விட்டதாகவும், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று அதற்குரிய அட்டைகள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில் மீண்டும் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமே இங்கு பதிய முடியும் உங்களுக்கு மேலக்கால் ஊராட்சிக்கு சென்று பதிய வேண்டும் என்று மீண்டும் அதிகாரிகள் தவறான தகவல் கூறியதை அடுத்து மீண்டும் ஆட்டோ பிடித்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிய அவலம் ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்த உறவினர்கள் கூறும்போது..,

நேற்று முன்தினம் வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடப்பதாகவும் அதனால் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை பெற்று செல்லுமாறு கூறிய நிலையில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்றோம் பின்பு அங்கு எங்களுக்கு தகவல் கொடுத்த வர்களிடம் கேட்டபோது முள்ளி ப்பள்ளம் ஊராட்சியில் முகாம் நடப்பதாகவும் அங்கு செல்லுமாறும் கூறிய நிலையில் மீண்டும் அனைவரையும் அழைத்துக் கொண்டு முள்ளிப்பள்ளம் வந்தபோது

முகாமில் இருந்தவர்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமே முகாம் நடைபெறுகிறது உங்களுக்கு மேலக்கால் ஊராட்சியில் நடைபெறும் அப்போது அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியதால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளோம்

அதிகாரிகள் முறையாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது ஆகையால் இனி வரும் காலங்களிலாவது மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு உரிய முறையில் அறிவிப்பு வெளியிட்டு எங்களை அலைக்கழிக்காத வண்ணம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.