• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி…

Byகுமார்

Nov 27, 2023

மதுரை டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம். காயதரிமங்கள்ராம். தலைமை வகித்தனர். எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.மேலும் மதுரா மில் தலைவர் தாமோதரக்கண்ணன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் செயலாளர் விஜயராகவன் மற்றும் மதுரை மாவட்டம் கைத்தறி தொழிற்சாலை செயலாளர் .எஸ்.பி. சர்வேஸ்வரன் ஆகியோரும் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் அறிவியல் மற்றும் கலை நுட்பத்தின் முக்கியத்துவத்தை குறித்து விவரித்தனர்; இந்தக் கண்காட்சியில் இயற்பியல் வேதியியல், தாவரவியல் விலங்கியல் மற்றும் கலை சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன. கண்காட்சியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கண்காட்சியை சிறப்பு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அனிதா தலைமையில் ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா மக்கள் தொடர்பு மேலாளர் ரகுராம் செல்வகுமார் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் சுரேஷ் மற்றும்
ஆசிரிய ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.