• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கம்பம் அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

ByM. Dasaprakash

Nov 24, 2023

தேனி மாவட்டம் கம்பம் அருகே அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. ,ந்த திருக்கோவிலில் பல வருடங்களுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழாவினை வெகுவிமர்சையாக நடத்தினார்கள். விழாவில் முத்தாலம்மன் மற்றும் காளியம்மனு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து யாக குண்டம் வளர்த்து கோமாதா பூஜைகளை நடத்தினார்கள்.
அதன் பின்னர் புனித நீரினை எடுத்துச் சென்று விமான கோபுர கலசத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரின் மீதும் புனித நீரினை தெளித்து அன்னதானத்தை சிறப்பு பிரசாதமாக வழங்கினார்கள். இக்கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.