• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுரை தினமலர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

ByM.Bala murugan

Nov 22, 2023

மதுரை காளவாசல் பைபாஸ் சொக்கலிங்க நகர் பகுதியில் பிரபல தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் இரண்டாவது தளத்தில் அதிகாலை 3 மணி அளவில் யுபிஎஸ் பாக்ஸ் வெடித்து தீப்பற்றி எரிந்தது.அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எறிந்த தீயை தண்ணீர் பீச்சி மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல செய்தித்தாள் நிறுவனத்தில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.