• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுத்தை நடமாட்டம்..!

ByKalamegam Viswanathan

Nov 23, 2023

பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் – 4 பேரின் 5 ஆடுகளை கடித்து தின்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை கிராமத்தில் உலா வந்தோடு, அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிரமணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறுத்தையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.