• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா..!

ByKalamegam Viswanathan

Nov 19, 2023

சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு, நகரி சாலை பிரிவில் அமைந்திருக்கும் ராகு, கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது. முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, விநாயகர் உட்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல், லட்சுமி அருணாச்சலம், அருணா அருணாசலம், குருசாமி, சொக்கலிங்கம் சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் ஸ்ரீ பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.