• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நடப்பு ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

Byவிஷா

Nov 16, 2023
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியாவது வழக்கம். அதன்படி 2023 மற்றும் 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அன்பில் அமைச்சர அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பொது தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
அதன்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவும் மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் மே 15ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பன்னிரண்டாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.