• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் திருமதி மா.சந்திரா நூலகர் முன்னிலையில் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

அதில் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி எஸ்.கலைச்செல்வி சீனிவாசன் மற்றும் ஊர் அம்பலகாரர் காந்தி ஐயா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வாசகர் வட்ட தலைவராக எஸ்.ராஜசேகர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் வாசகர் வட்ட குடும்பமாக உருவாக்கப்பட்டது. S. ரமேஷ். A.ஜெயராமன். J.லாரன்ஸ் எட்வர்டு புலவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.